Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மேசைப்பந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் மேசைப்பந்து சுற்றுப்போட்டி எதிர்வரும் 29, 30 ஆம் திகதிகளில் யாழப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
யாழ். மாவட்ட மேசைப்பந்து சம்மேளனமும் பிங்பொங் நிறுவனமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள மேற்படி சுற்றுப்போட்டிக்கு அபான்ஸ் நிறுவனம் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.
இச்சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளும் இவ்விரு மாகாணங்களையும் சேர்ந்த மேசைப்பந்து வீரர்கள் தமது விண்ணப்பப்படிவங்களை ஐ.மோஹன், யாழ். மாவட்ட மேசைப்பந்து சம்மேளனம், மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மேசைப்பந்து வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரவும் இவ்விளையாட்டினை இவ்விரு மாகாணங்களிலும் பிரபல்யப்படுத்துவதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நடைபெறும் போட்டிகளில் வீரர்களை பங்கு கொள்ளச் செய்வதுமே இச்சுற்றுப் போட்டியின் நோக்கமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago