2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

டிக்கோயா டில்லரி பாடசாலையின் வீதியோட்டப் போட்டி

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன் டிக்கோயா டில்லரி தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆண் - பெண் இருபாலாருக்கான வீதியோட்டப் போட்டியொன்று நாளை 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

நாளை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தப் போட்டியின் ஆண்களுக்கான போட்டி டில்லரியிலிருந்து ஆரம்பமாகி பட்டில்கல சந்திவரை சென்று மீண்டும் அதே வழியாக டில்லரியை வந்தடைய உள்ளது. பெண்களுக்கான போட்டி புளியாவத்தை நகரில் ஆரம்பமாகி டில்லரிவரை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் டில்லரி தமிழ் வித்தியாலயத்தின் சகல பழைய மாணவர்களையும் பங்கேற்குமாறு இந்தப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.ரஜனிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--