Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
உடுவில் பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டு விழா நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் சி.அண்ணாத்துரையும் சிறப்பு விருந்தினர்களாக யாழ். மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி எ.எப்.ஜே.ரூபசிங்கம், சுன்னாகம் மக்கள் வங்கி முகாமையாளர் க.இராசமனோகரன், ஈ.பி.டி.பி.வலகாமம் அமைப்பாளர் சி.பாலிசங்கம் கலந்துகொள்ளவுள்ளனர். கௌரவ விருந்தினர்களாக சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபர் ஆறுதிருமுருகன், யாழ், மாவட்ட வலைப்பந்தாட்ட பயிற்றுனர் சி.மனோன்மணி, வலிதெற்கு ஈ.பி.டி.பி.அமைப்பாளர் சி.ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025