Menaka Mookandi / 2011 ஜூன் 13 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
யாழ். மாவட்ட கிரிக்கெட் கழகங்களுக்கு இடையே நடைபெற்று வரும் ஜொலி ஸ்டார் வெற்றிக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டியில் பன்னிரெண்டு கழகங்கள் கலந்து கொண்டுள்ளன. இதுவரை 19 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இது இருபதாவது போட்டியாகும். இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம் 286 ஓட்டங்களைப் பெற்று போட்டித் தொடரிலும் இதுவரை நடந்த போட்டிகளிலும் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணியென்ற சாதனையையும் நிலைநாட்டியுள்ளது.
புதன்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் கொக்குவில் மத்திய சன சமூக நிலைய விளையாட்டுக்கழக அணியும் ஜொலி ஸ்டார் விளையாட்டுககழக அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago