2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

கிரிக்கெட் போட்டியில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்திற்கு சம்பியன்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 18 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்,ரி.விவேகராசா)

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் வடமாகாண மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் 03 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று வடமாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயமும் யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியும் மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி 10 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 71 ஓட்டங்களை பெற்றது. 72 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் 9.5 ஓவர்களில் 74 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

இரு அணிகளும் அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் பாடசாலை அணிகளுக்கிடையே நடைபெறும் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .