2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு தேசிய ஒலிம்பிக்தின நிகழ்வுகள்

Kogilavani   / 2011 ஜூன் 25 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.விவேகராசா)

சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு தேசிய ஒலிம்பிக் தின நிகழ்வுகள் வவுனியா நகர சபை மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை  மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில், வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ், தேசிய ஒலிம்பிக்குழுவின் சிரேஸ்ட உப தலைவர் தேவா ஹென்றி, பாதுகாப்பு படைகளின் தளபதிகள், அரச உயர் அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது, ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற சித்திரபோட்டி, சுவரொட்டி போட்டிகளில் வெற்றியீட்டிய பாடசாலை மாணவர்களுக்கு பணப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

மேலும், வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 50 பாடசாலைகளுக்கு பாடசாலை புத்தகங்களும் அன்பளிப்பு செய்யப்பட்டன.

விசேடமாக செட்டிகுளம் கதிர்காமர் நலன்புரிநிலையத்தில் உள்ள இடம்பெயர்ந்த மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், 1000 பாடசாலை மாணவர்கள் கலந்துக்கொண்ட ஓட்டப்போட்டி நடைபெற்றதுடன் மூவினத்தையும் பிரதிபலிக்கும் வகையில் மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும், இராணுவத்தினரின் பாண்ட வாத்திய அணிவகுப்பும் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X