2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் நிந்தவூர் அல்-அஸ்றக் தேசிய பாடசாலைக்கு அதிக பதக்கங்கள்

Super User   / 2011 ஜூலை 15 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஆர்.அஹமட்)

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் நிந்தவூர் அல்-அஸ்றக் தேசிய பாடசாலை கூடுதலான பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

13 வயதிற்கு கீழ் பட்ட (ஆண்கள் பிரிவு) 4ஒ100 மீ அஞ்சல் ஓட்டத்தில் தங்க பதக்கமும், 19 வயதிற்கு கீழ் பட்ட (ஆண்கள் பிரிவு) 4ஒ100 மீ அஞ்சல் ஓட்டத்திலும் 4ஒ400 மீ அஞ்சல் ஓட்டத்திலும் வெள்ளி பதக்கங்களையும்இ கபடி போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளன.

இதற்கு மேலதிகமாக 19 வயதிற்கு கீழ் பட்ட (ஆண்கள் பிரிவு) 110 மீ தடைதாண்டல் போட்டிஇ முப்பாச்சல் போட்டி ஆகியவற்றில் எம்.எஸ்.எம்.நுஸ்கி தங்க பதக்கங்களையும்இ ஏ.எம்.மயாசிர் 200மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும்இ 100 மீ ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தையும்இ எம்.எஸ்.எம்.முர்சித்  110 தடைதாண்டல் போட்டியில் வெள்ளி பதக்கத்தையும்இ 40 0மீ தடைதாண்டல் போட்டியில்  வெண்கல பதக்கத்தையும்இ ஜே.எம்.அஜ்மல் 400 மீ  தடைதாண்டல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும்இ நீளம் பாய்தல் போட்டியில் என்.நிக்கி அகமட் வெள்ளி பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

இம்மாணவர்களை கௌரவிக்கும் வகையில் அதிபர் ஆசிரியர்கள்இ மாணவர்கள் ஆகியோர்களால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்வைபவத்தில் கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபீக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பதக்கங்களை அணிவித்து பரிசுகளையும் வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .