2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூலை 17 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எப்.முபாரக்)

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற 2011ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற முள்ளிப்பொத்தானை தி/சிறாஜ் நகர் மகாவித்தியாலய வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

அதிபர் ஏ.சி.எம்.கபீர் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் 19 வயதுடையவர்களுக்கான பிரிவில் ஈட்டி எறிதலில் முதலாம் இடத்தைப் பெற்ற கே.எம்.நகீல், 17 வயதுடையவர்களுக்கான பிரிவில் ஈட்டி எறிதலில் முதலாம் இடத்தைப்; பெற்ற ஏ.எப்.றஸ்மி, 19 வயதுடையவர்களுக்கான பிரிவில்; குண்டு எறிதலில்  மூன்றாம் இடத்தையும்  பரிதி வட்டம் வீசுதலில் இரண்டாம் இடத்தையும்; பெற்ற எம்.சி. பஹினூரா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக தம்பலாகமம் பிரதேசசபைத் தவிசாளர் ஏ.சுபியான், விசேட அதிதியாக கோட்டக்கல்வி அதிகாரி ஏ.ஆர்.எம்.சுபைரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X