2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

பாடுமீன் சமர் கிரிக்கெட் போட்டியில் மட்டு. மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு வெற்றி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 17 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு சென் மெதடிஸ்த மத்திய கல்லூரிக்குமிடையிலான பாடுமீன் சமர் என அழைக்கப்படும் கிரிக்கெட் போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி 42க்கு 4 பந்து வீச்சு ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 154 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி 47க்கு 5 பந்து வீச்சு ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.

கடந்த மூன்று வருடங்கள் நடைபெற்ற இப்போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி இரண்டு தடவைகளும் இம்முறை மெதடிஸ்த மத்திய கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன.

இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.டி.மாசிலாமணி, மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.பவளகாந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிறின்ஸ் காசிநாதர், மட்டக்களப்பு கல்வி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் கே.சத்தியநாதன் உட்பட பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X