2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

'பட்டில் ஒப் த பிரின்சஸ்' கிரிக்கட் போட்டியில் கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயம் வெற்றி

Kogilavani   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்திற்கும், கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்குமிடையில் வருடா வருடம் நடைபெற்று வரும் 'பட்டில் ஒப் த பிரின்சஸ்' எனும் தலைப்பிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியில் இவ்வருடம் கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயம் வெற்றி பெற்றுள்ளது.

லியோ கழகத்தின் அனுசரணையில் நேற்று சனிக்கிழமை கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இச் சுற்றுப் போட்டியில் அதிதிகளாக மட்டக்களப்பு வயக் கல்விப் பணிப்பாளர் திருமதி பவளகாந்தன், லியோ கழக ஆலோசகர் லயன் பாஸ்கரன், பட்டிருப்பு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் குருகுல சிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X