2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வலைப்பந்தாட்ட போட்டியில் புனித சிசிலியா பெண்கள் கல்லூரி சம்பியன்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 15 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி, லோஹித், ஜிப்ரான்)
திருகோணமலை, புனித மேரி பெண்கள் கல்லூரிக்கும், மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரிக்கும் இடையில் வருடாவருடம் நடைபெற்று வருகின்ற மரியன் செசில் வலைப்பந்தாட்ட போட்டியில் புனித சிசிலியா பெண்கள் கல்லூரி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துகொண்டுள்ளது.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை இப்போட்டி இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும் திருகோணமலை புனித மேரி பெண்கள் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி பவளரானி, மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி எம்.எலிசபத், அருட் தந்தை எஸ்.ஏ.எஸ்.தேவசீலன், பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .