2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வட மாகாண கராத்தே போட்டியில் சென். ஜோன்ஸ் மாணவன் சம்பியன்

Super User   / 2011 ஒக்டோபர் 19 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வட மாகாண வீர, வீராங்கனைகளுக்கான கராத்தே போட்டியில் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவன் விஜயராஜ் நிவேதன் மூன்று போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளான்.

இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட இந்த போட்டி நேற்று  செவ்வாய்கிழமை ஓ.எல்.ஆர் மைதானத்தில் நடைபெற்றது.

வட மாகாண வீர, வீராங்கனைகளுக்கான இந்த கராத்தே பேட்டியில் 8 மற்றும் 9 வயது பிரிவுகளில் தனிக்காட்டா, குழுக்காட்டா மற்றும் சண்டை போட்டிகளிலேயே விஜயராஜ் நிவேதன் முதலிடம் பெற்று சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள்  இந்த பேட்டியில் பங்குபற்றியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--