2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் வீர, வீராங்கனைகளை கௌரவிக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்தும் வர்ண இரவு நிகழ்வில் 2010ஆம் 2011ஆம் ஆண்டுகளில் தேசிய மட்டத்திலும் வடமாகாண மட்டத்தில் பதக்கங்களை பெற்றவர்களும் சாதனைகள் புரிந்த வடமாகாண பாடசாலைகளின் விளையாட்டு வீர, வீராங்கனைகள் மற்றும் கழகங்களின்  வீர, வீராங்கனைகள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நாளை சனிக்கிழமை வடமாகாண ஆளுநரின் செயலாளரும் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருமான இ.இளங்கோவன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக வடமாகான ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் பற்குணராசா யோகேஸ்வரியும் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாடசாலைகள் மட்டத்தில் 2010ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற பாடசாலைகளுக்கான உடற்பயிற்சிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலாம் இரண்டாம் இடங்களைப் பெற்ற இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் பெண்களுக்கான போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகளும் 2010ஆம் ஆண்டு ஆண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில்  17 வயதுப் பிரிவில் இரண்டாம் இடத்தையும் 19 வயதுப் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்ற மன்னார் புனித சேவயர் ஆண்கள் கல்லூரி வீரர்களும்  கௌரவிக்கப்படவுள்ளனர்.  2010ஆம் ஆண்டு அகில இலங்கைப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற தடகளப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் பதக்கங்களை வென்ற வீர, வீராங்கனைகள் 17 பேர் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

2011ஆம் ஆண்டு அகில இலங்கைப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆண்களுக்கான  உடற்பயிற்சிப் போட்டியில் முதலாம் இடத்தை தேசிய மட்டத்தில் பெற்ற ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி, பெண்கள் பிரிவில் முதலாம் இரண்டாம் இடங்களைப் பெற்ற மானிப்பாய் மகளிர் கல்லூரி, வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய வீர, வீராங்கனைகள் கௌரவிக்கப்படவுள்ளார்கள். கால்பந்தாட்டப் போட்டியில் 19 வயதுப் பரிவில் இரண்டாம் இடம் பெற்ற மன்னார் புனித சேவயர் ஆண்கள் கல்லூரி  கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

தேசிய மட்டத்தில் முதல் தடவையாக பாரம் தூக்கும் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர் எ.நிதன் உட்பட 21 வீர, வீராங்கனைகள் கௌரவிக்கப்படவுள்ளனர்.     2010ஆம் 2011ஆம் ஆண்டுகளில் இலங்கை மெய்வன்மைச்சங்கம் நடத்திய தேசிய மட்டத்தில் நடத்திய கனிஷ்ட பிரிவினருக்கான போட்டிகளில் கலந்துகொண்டு பதங்கங்களை வென்ற வீர, வீராங்கனைகள் 14 பேரும் சிரேஷ்ட பிரிவில் 06 பேரும் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

பெண்களுக்கான தேசிய போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்ற 09 பேரும் கௌரவிக்கப்படவுள்ளனர்.  வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்திய தடகளப் போட்டிகளில் 2010ஆம் ஆண்டு 18 வீர, வீராங்கனைகளும் 2011ஆம் ஆண்டு 03 வீராங்கனைகளும்  சாதனைகள் படைத்தமைக்காக கௌரவிக்கப்படவுள்ளார்கள்.  இலங்கை விளையாட்டு அமைச்சு நடத்திய போட்டிகளில் 2010ஆம் ஆண்டு பதக்கங்களை வென்ற 04 வீர, வீராங்கனைகளும் 2011ஆம் ஆண்டு பதக்கங்களை வென்ற கூடைப்பந்தாட்ட அணி, கால்பந்தாட்ட அணி, கபடி அணி என்பவற்றுடனான வீர, வீராங்கனைகள் 02 பேரும் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

இவர்களுடன்  கபடி தேசிய அணியில் இடம்பெற்ற மூன்று வீரர்களும் சர்வதேச மட்டத்தில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட போட்டியில் 290 புள்ளிகளைப் பெற்ற சிறந்த வீராங்கனையாக சர்வதேச மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த  சிவலிங்கம் தர்சினியும் கௌரவிக்கப்படவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--