2021 ஜனவரி 20, புதன்கிழமை

கால்பந்தாட்டத்தில் நாவாந்துறை சென்.நீக்கில்ஸ், பாடும் மீன் அணிகள் வெற்றி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 09 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கு.சுரேன்)

நாவாந்துறை சென்.நீக்கில்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் மயிலங்காடு ஞானமுருகன் அணிக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற முதலாவது கால்பந்தாட்டப் போட்டியில் நாவாந்துறை சென்.நீக்கில்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

யாழ்ப்பாணம் கால்பந்தாட்ட லீக், தமது அங்கத்துவ விசேட எட்டு அணிகளுக்கிடையில் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்திவருகின்றது.

நாவாந்துறை சென்.நீக்கில்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் மயிலங்காடு ஞானமுருகன் அணிக்கும் இடையிலான போட்டியில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதனையும் போடவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்தில் நாவாந்துறை சென்.நீக்கில்ஸ் அணி ஒரு கோலினைப் போட்டது. பதில் கோல் எதனையும் ஞானமுருகள் அணி அடிக்காததினால் சென்.நீக்கில்ஸ் அணி வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் அச்செழு வளர்மதி விளையாட்டுக் கழகமும் குருநகர் பாடும் மீன் விளையாட்டுக்கழகமும் மோதியது. இதில் பாடும் மீன் விளையாட்டுக்கழகம் 2 : 0 என்ற கோல் கணக்கில் இலகுவாக வென்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .