2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்க போட்டியில் ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி வெற்றி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடத்தும் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயமும் ஸ்ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரியும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய விக்னேஸ்வரா மகா வித்தியாலய அணி,  முதல் இன்னிங்ஸில் 22.3 பந்து பரிமாற்றங்களில்  109 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பதிலுக்கு விளையாடிய  ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்  25 பந்து பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் ஜக்சன்  45 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில்  ரிஷிகீர்த்தனன் 10 பந்து பரிமாற்றங்களில்;  21 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைப் பெற்றார்.

பதிலுக்கு 126 இலக்கினை எதிர்கொண்டு களம் இறங்கிய ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணி 19.2 பந்து பரிமாற்றங்களில் 5 விக்ன்;கட் இழப்பிற்கு 128 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. ஆரம்ப  துடுப்பாட்ட வீரராக  களம் இறங்கிய  யு.மதுகரன் ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

  Comments - 0

  • H.RISHIKEITHTHANAN Friday, 25 January 2013 01:57 PM

    எதிர் காலத்தில் உனது ஆட்டம் தொடரட்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .