2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

விளையாட்டு பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 12 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 23 பாடசாலைகளைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் விளையாட்டு பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையால், மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மனித விழுமியங்களை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாகவே பாடசாலை மாணவர்களுக்கு இப்பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.

இப்பயிற்சிப்பட்டறையில் பலவகையான விளையாட்டுக்கள் பயிற்றுவிக்கப்பட்டன. இலங்கை தேசிய விளையாட்டு சபையின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்கள் மாணவர்களுக்கு இப்பயிற்சியினை வழங்கினர்.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைத் தலைவர் த.வசந்தராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப்பணிப்பாளர் கேணல் மடுகல்ல,  உதவிக் கல்விப் பணிப்பாளர் (விளையாட்டு) லவகுமார், உதவிக்கல்விப் பணிப்பாளர் சத்தியநாதன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை நிறைவேற்று உத்தியோகஸ்த்தர் வி.பிறேமகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .