2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி

Kogilavani   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)
ஸ்ரீலங்கா சுதந்திர அமைப்பானது எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றினையும் மரதன்  ஓட்டப் போட்டி ஒன்றினையும் திருகோணமலையில் நடத்தவுள்ளது.

இப்போட்டிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 12, 13, 18,19, 20 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சகல கிரிக்கெட் கழகங்களும் இச்சுற்றுப் போட்டியில் பங்கு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெறும் அணிகளுக்கு பெறுமதியான பரிசுகளும் கலந்து கொள்ளும் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட உள்ளன.

இப்போட்டிகளில் பங்குபெற விரும்புபவர்கள் விண்ணப்பங்களை எதர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு 25ஆம் திகதிக்கு முன்னதாக தலைவர், ஸ்ரீலங்கா சுதந்திர அமைப்பு 19டீ 1ஃ1 விகாரை வீதி. என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இப்போட்டி தொடர்பிலான மேலதிக  தகவல்களை  077-0373908 என்னும் இலக்கத்துடன் பெற்றுக் கொள்ளலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .