2021 ஜனவரி 23, சனிக்கிழமை

சந்திரன் விளையாட்டுக்கழகம் - சிலாவத்தை இளம் பறவையன் அணிகள் இறுதிப்போட்டியில்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கு.சுரேன்)

முல்லைத்தீவு இராணுவ படைப்பிரிவினால் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்று அலம்பில் விளையாட்டு மைதனாத்தில் நடத்தி வந்தது. மேற்படி சுற்றுப் போட்டிகளின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் சந்திரன் விளையாட்டுக் கழகமும், சென்.யூட் விளையாட்டுக் கழகமும் மோதியது. இப்போட்டியில் சந்திரன் விளையாட்டுக்கழகம் 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் செம்மலை உதயசூரியன் விளையாட்டுக்கழக அணியினை எதிர்த்து சிலாவத்தை இளம் பறவையன் விளையாட்டுக்கழகம் மோதியது. இப்போட்டியில் இரு அணிகளும் போட்டி முடிவடையும் வரையும் கோல் எதனையும் போடவில்லை.

பின்னர் நடைபெற்ற சமநிலை தவிர்பு உதையில் சிலாவத்தை இனம் பறவையன் விளையாட்டுக்கழகம் 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இறுதிப்போட்டி நாளை 25 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு அலம்பில் மைதனாத்தில் நடைபெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .