2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி இனிங்ஸால் வெற்றி

Kogilavani   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட இரண்டு நாட்களைக் கொண்ட துடுப்பாட்டப் போட்டி ஒன்றில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி இனிங்ஸால் வெற்றிபெற்றுள்ளது.

மேற்படி போட்டி சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. இப்போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியினை எதிர்த்து சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்ற சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கி முதல் இனிங்ஸில் 93 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் லிவிங்டன் 22 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பாக காணாமிர்தன் 3 இலக்குகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் தமது முதலாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 184 ஓட்டங்களைப் பெற்றுச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் பிருந்தாபன் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும், துவாரகசீலன் 42, அமடஜன் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்.பற்றிக்ஸ் அணி சார்பாக தனுஜன் 5, ஜக்ஸன் 4 இலக்குகளை வீழ்த்தினார்.

91 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி, சென்ஜோன்ஸ் பந்துவீச்சினை எதிர்கொள்ள முடியாமல் 52 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி லோகேஸ்ரன் 7 இலக்குகளைக் கைப்பற்றி தமது அணியின் இனிங்ஸ் வெற்றிக்கு வழிசமைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .