2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

தேசிய கால்பந்தாட்ட சம்பியனாகிய மன்னார் மாவட்ட அணி

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

25 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் கால்பந்தாட்ட பிரிவில் மன்னார் அணி செம்பியனாகியுள்ளது.

இலங்கை தேசிய இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில், மாவட்ட ரீதியிலான இளைஞர் விளையாட்டு அணிகளுக்கிடையில் தற்போது இப்போட்டி நடைபெற்று வருகின்றது. 

தேசிய இளைஞர் விளையாட்டு விழா கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப்போட்டி பொலனறுவையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதன் முறையாக இறுதிப்போட்டியில் வடமாகாணத்தைச் சேர்ந்த இரண்டு மாவட்டங்களான யாழ்;ப்பாண மாவட்டம் மற்றும் மன்னார் மாவட்ட அணிகள் மோதின.

முதற்பாதியாட்டத்தில்; இரு அணிகளும் கோல்கள் எதுவும் பெறவில்லை. தொடர்ந்து இரண்டாவது பாதியாட்டத்தில் மன்னார் மாவட்ட அணி ஆட்டத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

தாக்குதல் ஆட்டங்கள் மேற்கொண்ட மன்னார் மாவட்ட அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து யாழ்.மாவட்ட அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

போட்டி முடியும் வரையும் இந்த இரண்டு கோல்களும் நிலைக்க, மன்னார் மாவட்ட அணி 2:0 என்ற கோல்கள் கணக்கில் தேசிய சம்பியனாகியது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--