2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

சதுரங்க போட்டியில் ஹரிகிசன் சாம்பியன்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப்போட்டியில் (செஸ்) கண்டியைச்சேர்ந்த கிருபாகர் ஹரிகிசன் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டுள்ளார்.

ஒன்பது வயதிற்கு கீழ்ப்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியிலேயே அவர் ஆறுக்கு ஆறு புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டதுடன் 9 ஆவது ஆசிய செஸ் விளையாட்டு போட்டியில் பங்குபற்றுவதற்கான தகுதியையும் பெற்றுக்கொண்டார்.

கண்டி திருத்துவ கல்லூரியில் நான்காம் தரத்தில் பயிலும் ஹரிகிசன் இரண்டு வயதுமுதல் செஸ் விளையாடிவருவதுடன் உள்ளுரில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை தனதாக்கி கொண்டுள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப்போட்டி யக்கலை அனுர ஜுனியர் பாடசாலையில் கடந்த மூன்றாம்,நான்காம் திகதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் 201 போட்டியாளர்கள் பங்கேற்றதுடன் மத்திய மாகாணத்திலிருந்து இவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்த போட்டியில் ஆறுக்கு ஆறு புள்ளிகளில் இருவர் வெற்றியீட்டியதையடுத்து இருவருக்கும் இடையில் அதிவேகப்போட்டியொன்று நடத்தப்பட்டது. அந்த போட்டியில் இரண்டுசுற்றுக்களில் இவர் வெற்றியீட்டி போட்டியில் சாம்பியனானார்.

இந்த வெற்றியை அடுத்து ஹிக்கடுவையில் ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஒன்பதாவது ஆசிய செஸ் விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியை பெற்றுக்கொண்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X