2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

சூட்டிங் ஸ்டார் அணி வெற்றி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


களுவாஞ்சிகுடி மிலேனியம் விளையாட்டுக்கழகம் தனது 8 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கழகங்களுக்கிடையே புதன்கிழமை மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியினை நடத்தியது.

இச் சுற்றுப் போட்டியானது களுவாஞ்சிகுடி வை.டி.சி அணிக்கும் திருப்பழுகாமம் சூட்டிங் ஸ்டார் அணியினருக்கும் இடையே நடைபெற்றது. அதில் திருப்பழுகாமம் சூட்டிங் ஸ்டார் அணியினர் வெற்றிபெற்றனர்.

திருப்பழுகாமம் சூட்டிங் ஸ்டார் அணி, 8 ஓவர்களுக்கு 100 ஓட்டங்களைப் பெற்றனர். எதிர்த்தாடிய வை.டி.சி அணி 5 ஓவர்களுக்குள் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவிக் கொண்டது.

இதில் அரையிறுதிப் போட்டியிலே சிறந்த ஆட்டக்காரராக முதல் பந்து வீச்சுப் இறுதியிலே 32 ஓட்டங்களைக் குவித்த சோ.கச்சிதனும் இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரர் மற்றும் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை முதல் பந்து வீச்சுப் இறுதியிலே அடுத்தடுத்து 3 விக்கட்டுகளை வீழ்த்திய அணித்தலைவர் பு.துவாரகனும்  பெற்றுக்கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--