2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஆரையம்பதி செயலகம் சம்பியன்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரி.எல்.ஜவ்பர்கான்-


மட்டக்களப்பு மாவட்ட பிரசே செயலகங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டியில் ஆரையம்பதி பிரதேச செயலகம் சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் ஆரையம்பதி பிரதேச செயலகமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் மோதிக்கொண்டன.

நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் முதலில் துடுப்பெடுத்தாடிய மண்முனை வடக்கு பிரதேச செயலக அணி 62 ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆரையம்பதி அணி 9.5 ஓவர்களில் 64 ஓட்டங்களைப்பெற்று வெற்றயீட்டியது.

போட்டித்தொடரின் மூன்றாமிடத்தை ஏறாவூர்;நகர பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டது.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக மண்முனை வடக்கு அணியைச்சேர்ந்த நதீகன் தெரிவானார். தொடர் ஆட்டநாகயனாக ஆரைம்பதி செயலகப்பிரிவு அணிவீரர் சுரேஸ் தெரிவானார்.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரன் மற்றும் மாவட்ட விளையாட்டு அதிகாரி எஸ்.ஈஸ்வரன் ஆரையம்பதி பிரதேச செயலாளா கே.வாசுதேவன் ஆகியோர் பிரதம அதிதிகளாள கலந்து கொண்டு பரிசில்களை வழங்கிவைத்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--