2021 மார்ச் 01, திங்கட்கிழமை

தையிட்டி வள்ளுவர் அணி தாச்சியில் சம்பியன்

Super User   / 2014 ஏப்ரல் 07 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


உடுவில் உதயசூரியன் விளையாடுக்கழகத்தினரால், கழகத்தின் முன்பள்ளி கட்டிட நிதிக்காக நடத்தப்பட்ட தாச்சிச் சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டியில் தையிட்டி வள்ளுவர் அணி சம்பியனாகியது.


மேற்படி தாச்சிச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (06) உடுவில் உதயசூரியன் மைதானத்தில் நடைபெற்ற போது, தையிட்டி வள்ளுவர் அணியினை எதிர்த்து தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழக அணி மோதியது.


இதில் தையிட்டி வள்ளுவர் அணி 7:2 என்ற பழங்கள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனாகியது,


இந்த இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசில்களையும் கேடங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் வலி.தெற்கு (உடுவில்) பிரதேச சபை தலைவர் தி.பிரகாஸ், வலி.தெற்கு இளைஞர் சம்மேளன தலைவர் செ.விஜிதரன், வலி.தெற்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.வல்லவகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .