2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

களுவாஞ்சிகுடி மிலேனியம் விளையாட்டுக் கழகம் சாம்பியன்

Super User   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


களுவாஞ்சிகுடி  வை.டி.எஸ்.சி (லுனுளுஊ) விளையாட்டுக் கழகத்தினர் வருடாந்தம் நடத்துகின்ற  மென்பந்து கிரிக்கேட் போட்டி களுவாஞ்சிகுடி மைதானத்தில் சனிக்கிழமை (19) நடைபெற்றது.
இப்போட்டியில் கலந்துகொண்ட களுவாஞ்சிகுடி மிலேனியம் விளையாட்டுக்  கழகம் சாம்பியனாகி கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது.

களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தினரோடு இறுதிப் போட்டியில் மோதிய களுவாஞ்சிகுடி மிலேனியம் விளையாட்டுக்  கழகம், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்த வெற்றியை பதிவு செய்து கொண்டது.

களுவாஞ்சிகுடி மிலேனியம் விளையாட்டுக்  கழக தலைவர்  ராதேஸிடம் இவ்விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு ஸ்ரீலங்கா டெலிகொம் பொறியியலாளர் கோபிநாத் மற்றும் களுவாஞ்சிகுடி வைத்திய அத்தியேட்சகர் கு.சுகுணன் வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .