2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் வெற்றி

Super User   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


சினேக பூர்வ ரூபி ஞாபகார்த்த கிண்ணம் டுவெண்டி-20 கிறிக்கெற் போட்டியில் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் வெற்றி.

ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (19) ஏறாவூர் சவுண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்திற்கும் இடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் ஆறு இலங்குகள் இழப்பிற்கு 121 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் சவுண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்  சகல விக்கெற்றுகளையும் இழந்தது 109 ஓட்டங்ளை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

ஏறாவூர் நகரசபை உறுப்பினர் அமீன் இஸ்ஸத் ஆஸாத்தின்  அழைப்பின் பேரில் முன்னாள் இலங்கை கிறிக்கெற் அணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்த இரு அணிகளுக்குமிடையிலான சினேக பூர்வ கிரிகெட் போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

ஏறாவூர் நகரசபையின் உறுப்பினர்களான எம்.எல்.ரெபுபாசம், ஐ.பாஸித் அலி, ஏ.ஆர்.பிரௌஸ் ஆகியோரும் இந்தப் போட்டிகளில் கலந்து சிறப்பித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--