2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

அரச அதிபர் வெற்றிக்கிண்ணம்

Super User   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராச


யாழ்.மாவட்ட நலன்புரிச் சங்கம் 'அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்காக' யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையில் நடத்தி வந்த விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகளும் பரிசளிப்பு விழா வைபவமும் செவ்வாய்க்கிழமை (22) மானிப்பாய் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

யாழ்.மாவட்டச் செயலக நலன்புரிக்கழகத் தலைவர் க.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டார்.

கால்பந்தாட்டத்தில் கரவெட்டி

அரச அதிபர் வெற்றிக்கிண்ண ஆண்கள் கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் கரவெட்டி பிரதேச செயலக அணியினை எதிர்த்து தெல்லிப்பளை பிரதேச செயலக அணி; மோதியது.

முதல்பாதியாட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் பெறாத நிலையில் முடிவடைந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலக அணி ஒரு கோல் பெற்று முன்னிலை பெற்றது. இறுதிவரை இரு அணிகளும் வேறு கோல்கள் பேறாத நிலையில் கரவெட்டி பிரதேச செயலக அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பினாகியது.

கரப்பந்தாட்டத்திலும் கரவெட்டி

அரச அதிபர் வெற்றிக்கிண்ண ஆண்கள் கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் கரவெட்டி பிரதேச செயலக அணியினை எதிர்த்து யாழ்.மாவட்டச் செயலக அணி மோதியது.

மூன்று செற்கள் கொண்ட இறுதிப்போட்டியில் முதல் செற்றினை கரவெட்டி அணி 17:15 என்ற புள்ளிகள் அடிப்படையிலும், இரண்டாம் செற்றினை யாழ்.மாவட்;டச் செயலக அணி 15:07 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் வென்றன.

இதனால் விறுவிறுப்படைந்த மூன்றாவது சுற்றில் அபாரமாக ஆடிய கரவெட்டி அணி 15:10 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஆட்டத்தை தனதாக்கியது.

இறுதியில் கரவெட்டி அணி 2:1 என்ற செற்கள் கணக்கில் சம்பியனாகியது.

வலைப்பந்தாட்டத்தில் ஊர்காவற்றுறை அணி

அரச அதிபர் வெற்றிக்கிண்ண பெண்கள் வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வேலணை பிரதேச செயலக அணியினை எதிர்த்து ஊர்காவற்துறை பிரதேச செயலக அணி மோதியது.

முதல் பாதியாட்டத்தில் ஊர்காவற்துறை பிரதேச செயலக அணி 07:06 புள்ளிகள் என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றது. இருந்தும் இரண்டாவது பாதியாட்டத்தில் வேலணை பிரதேச செயலக அணி 4:3 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றது.

இரண்டு அணிகளும் தலா 10 புள்ளிகளைப் பெற்றிருந்தமையினால் போட்டியில் வெற்றியாளரைத் தீர்மானிக்க 4 நிமிடங்கள் மேலதிகமாக வழங்கப்பட்டன.

இந்த 4 நிமிடங்களில் வேலணைப் பிரதேச செயலக அணி ஒரு புள்ளி பெற்றுச் சம்பியனாகியது.

கயிறுழுத்தல்

அரச அதிபர் வெற்றிக்கிண்ண பெண்கள் கயிறிழுத்தலில் கோப்பாய் பிரதேச செயலக அணியும், ஆண்கள் கயிறிழுத்தல் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணியும் சம்பியனாகின.

மென்பந்து துடுப்பாட்டம்

அரச அதிபர் வெற்றிக்கிண்ண ஆண்களுக்கான மென்பந்து துடுப்பாட்டப் போட்டியில் சங்கானை பிரதேச செயலக அணியினை எதிர்த்து ஊர்காவற்துறை பிரதேச செயலக அணி மோதியது.

அணிக்கு 11 பேர் 15 பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட போட்டியாக இது நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சங்கானைப் பிரதேச செயலக அணி 15 பந்துப்பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஊர்காவற்துறை பிரதேச செயலக அணி 14 ஓவர்கள் நிறைவில் அனைத்து இலக்குகளையும் இழந்து 113 ஓட்டகளை மாத்திரம் பெற்றுக்கொண்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X