2021 ஜனவரி 23, சனிக்கிழமை

நுவரெலியா மாநகர முதல்வர் கிண்ண கால்பந்தாட்ட போட்டி ஆரம்பம்

Super User   / 2014 ஜூலை 03 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

நுவரெலியா மாநகர சபையின் 2014 ஆம் ஆண்டின் முதல்வர் கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி நேற்று புதன்கிழமை (03) மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கான  அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர சபையின் உறுப்பினரும் நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவருமான எல்.நேருஜி தெரிவித்தார். போட்டிகள் அனைத்தும் நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளன.

நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 16 கழகங்கள், நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டியிடவுள்ளன.

முதலாவது சுற்று போட்டிகள் அனைத்தும் லீக் முறையிலும் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் நொக்அவுட் முறையிலும் நடைபெறவுள்ளன. மொத்தமாக 27 போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு நுவரெலியா மாநகர முதல்வரின் வெற்றிக் கேடயமும் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளதுடன் போட்டியின் சிறந்த வீரர், சிறந்த கோல் காப்பாளர் ஆகியோரும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நுவரெலியா மாநகர சபை முதல்வர் கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் தொடர்ச்சியாக ஜந்து முறை யங்பேட்ஸ் விளையாட்டுக் கழகம் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .