2021 மே 12, புதன்கிழமை

புத்தளம் த்ரீ ஸ்டார்ஸ் வெற்றி

George   / 2015 ஜனவரி 31 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் த்ரீ ஸ்டார்ஸ் மற்றும் புத்தளம் போல்டன் அணிகளுக்கிடையில் நடைபெற்ற எப்.ஏ. கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் புத்தளம் த்ரீ ஸ்டார்ஸ் அணி 03:02 என்ற  கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.


இந்த ஆட்டமானது, வெள்ளிக்கிழமை(30) மாலை புத்தளம் ஸாகிரா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
புத்தளம் நகரின் மிகப்பழைமை வாய்ந்த இரு அணிகள் நீண்ட காலத்துக்கு பிறகு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் தொடர் ஒன்றில் போட்டியிட்டமை சிறப்பம்சமாகும்.


இடைவேளைக்கு முன்னதாக இரு அணிகளும் தலா இரு கோல்களை பெற்றிருந்தன. எனினும் இடை வேளைக்கு பின்னர் த்ரீ ஸ்டார்ஸ் அணியினர் மேற்கொண்ட அதிரடியான ஆட்டத்தில் மற்றுமொரு கோலினை போட்டு அவ்வணி வெற்றி பெற்றது.


போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம். ஜிப்ரி, எம்.ஆர்.எம். அம்ஜத், எம்.ஏ. பஸ்ரின் ஆகியோர் கடமையாற்றினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .