2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

டைனமிக்ஸ் கழகம் 248 ஓட்டங்களால் வெற்றி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 24 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் 50 ஓவர்கள்; லீக் முறையிலான சுற்றுப்போட்டியில்  டைனமிக்ஸ் கழகம் 248 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இப்போட்டி நடைபெற்றது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற டைனமிகஸ் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது.  46.4 பந்துப் பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக  களம் இறங்கிய கிரிசாந்தன் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மற்றைய வீரரான  குமுதன் 100 ஓட்டங்களையும் சதுர்சன் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில்  பசார் விளையாட்டுக் கழகத்தின் சார்பில்  அன்பாஸ்  56 ஓட்டங்களக்கு 4 விக்கட்டுக்களையும்  மௌஜீத் 45  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு 293 என்ற ஓட்ட இலக்கினை எதிர்கொண்டு களம் புகுந்த பசார் விளையாட்டுக் கழகம்  16.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 44 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X