2021 ஜனவரி 20, புதன்கிழமை

37ஆவது கராத்தே சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்திற்கு 14 பதக்கங்கள்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

ஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் 37ஆவது கராத்தே சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்திலிருந்து பங்குபற்றியவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தையும் 2 வெள்ளிப்பதக்கங்களையும் 11 வெண்கலப்பதக்கங்களையும் சுவீகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண செயலாளர் ஏ.ஆர்.எம்.இக்பால் தெரிவித்தார்.

இம்மாதம் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதிவரை கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இக்கராத்தே சுற்றுப்போட்டி இடம்பெற்றது. இப்போட்டியில் 9 மாகாணங்களைச்  சேர்ந்த ஏராளமான வீரரர்கள் பங்குபற்றியதாகவும் அவர் கூறினார்.

கராத்தே சம்மேளனத் தலைவர் டபிள்யூ.ஜெயசுந்தர தலைமையில் இடம்பெற்ற இச்சுற்றுப்போட்டியில் முதலாவது ஜப்பான் தூதுவர் கிண்ணத்தை மேல்மாகாண அணி சுவீகரித்துக்கொண்டது.  சுற்றுத்தொடரின் முதலாவது இடத்தையும் மேல்மாகாணம் பெற்றுக்கொண்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .