2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

90 வயது நபர் சம்பியனாக தெரிவு

Kogilavani   / 2014 ஜூலை 04 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


வயோதிபர்களுக்கான 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் நடை போட்டிகளில் திருகோணமலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர் ஏ.என்.செல்லப்பிள்ளை சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் நடக்கும் போட்டிகள் கொழும்பு சுகததாச மைதானத்தில் ஜூன் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் ஏ.என்.செல்லப்பிள்ளை,  முறையே மூன்று போட்டிகளிலும் முதலாவது இடத்தை பிடித்தார்.

90 வயதான செல்லப்பிள்ளை இலங்கையில் மட்டும் அன்றி வெளிநாடுகளிலும் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கு பற்றி பதக்கங்களை பெற்றுள்ளார்.

இவர் மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .