Editorial / 2019 டிசெம்பர் 16 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். கணேசன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) இளைஞர் அணியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் பிரிவு, மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் திருமதி. ஜி. செண்பகவல்லியின் பூரண அனுசரணையுடன் நடைபெற்ற மலையகச் சிறகுகள் கரப்பந்தாட்டத் தொடரில் சாமிமலை மஹானிலு அணி சம்பியனாகியது.
மஸ்கெலியா பொது விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்ற மஸ்கெலியா, சாமிமலை பகுதிகளை பிரதிநிதித்துவபடுத்தி 16 அணிகள் பங்குபற்றிய இத்தொடரின் இறுதிப் போட்டியில் மஸ்கெலியா வளதலை அணியை வென்றே சாமிமலை மஹானிலு அணி சம்பியனாகியிருந்தது.

இறுதிப் போட்டிக்கு பிரதம விருந்தினராக, இ.தொ.கா தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்கமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கலந்துகொண்டு சிறப்பித்தார். சிறப்பு அதிதிகளாக முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம். ராமேஸ்வரன், முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர்கள், தற்போதைய பிரதேச சபை தலைவர்கள், ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
சம்பியனானன சாமிமலை மஹானிலு அணி, 50,000 ரூபாய் பணப்பரிசையும், வெற்றிக் கிண்ணத்தையும் பெற்றதுடன், இரண்டாமிடம் பெற்ற மஸ்கெலியா வளதலை அணியானது 25,000 ரூபாய் பணப்பரிசையும், இரண்டாமிடத்துக்கான கிண்ணத்தையும் பெற்றிருந்த நிலையில், மூன்றாமிடத்தைப் பெற்றிருந்த சாமிமலை ஸ்டொக்கம் அணியானது 15,000 ரூபாய் பணப்பரிசிலையும், மூன்றாமிடத்துக்கான கிண்ணத்தையும் பெற்றுக் கொண்டது. அத்தோடு, வெற்றிபெற்ற அணியின் வீரர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026