2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சம்பியனானது சென்றலைட்ஸ்

குணசேகரன் சுரேன்   / 2018 மே 14 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொக்குவில் மத்திய சனசமூக நிலையத்தின் கிரிக்கெட் தொடரின் வெள்ளி விழாக் கிண்ணத்தை, ஜொனியன்ஸ் அணியை வீழ்த்தி யாழ். சென்றலைட்ஸ் அணி கைப்பற்றியதுடன், இத்தொடரை அதிக தடவைகளாக ஐந்தாவது தடவையாக வென்ற அணியாக தம்மை மாற்றிக் கொண்டது.

யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கொண்ட தொடராக ஆண்டுதோறும் நடைபெறும் இத்தொடர், இம்முறை கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய மைதானங்களில் நடைபெற்றது.

இவ்வாண்டு தொடரில் மொத்தமாக 24 அணிகள் பங்குபற்றி, சென்றலைட்ஸ் அணியும் ஜொனியன்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை 40 ஓவர்களைக் கொண்ட போட்டியாக நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற சென்றலைட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கிணங்க, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஜொனியன்ஸ் அணிக்கு, ஆரம்பத்தில் ஏ. அன்புஜன் சிறப்பான தொடக்கம் கொடுத்து, 32 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து ஓட்டங்களை உயர்த்த உதவிய வி. யதுசன் 21 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார் தொடர்ந்து வந்த எம். ஹரிப்பிரவீன் சிறப்பான துடுப்பாட்டம் மூலம் 48 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இவருடன் துணைநின்ற கே. கிசாந்துஜன் அரைச்சதம் கடந்து ஜொனியன்ஸ் அணிக்கு வலுச்சேர்த்தார். பின்பகுதியில் களம்நு ழைந்த ஏ.சஞ்சயன் 38 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொடுத்தார். ஜொனியன்ஸ் அணி, 39.1 ஓவர்களில் 240 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில், எம். மயூரன் 5, ஜெரிக்துசாந்த் 2, பி. டர்வின், எஸ். தசோபன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு, 241 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தங்கள் பங்கிற்கு சீரான பங்களிப்பை வழங்கினர். ஜேம்ஸ் ஜான்சன் 16, பிரியலக்சன் 31, அலன்ராஜ் 10, செல்ரன் 44, டர்வின் 34, ஜெரிக்துசாந்த் 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தனர். நிரோஜன் இறுதிவரையில் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களுடன் இருக்கையில், சென்றலைட்ஸ் அணி, 38.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. பந்துவீச்சில், ஏ .சஞ்சயன், வி. யதுசன் ஆகியோர் தலா 2, என். சௌமியன், என். அன்புஜன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இறுதிப் போட்டியின் நாயகனாக சென்றலைட்ஸ் அணியின் பி. நிரோஜன், சிறந்த துடுப்பாட்ட வீரராக ஜொனியன்ஸ் அணியின் கே. கிசாந்துஜன், சிறந்த பந்துவீச்சாளராக சென்றலைட்ஸ் அணியின் எம். மயூரன், சிறந்த களத்தடுப்பாளராக ஜொனியன்ஸ் அணியின் பி. பிருந்தாபன் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X