2020 ஜூலை 11, சனிக்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

எஸ்.கார்த்திகேசு   / 2019 ஜூன் 05 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, திருக்கோவில் கதிரவன் விளையாட்டுக் கழகத்துக்கு 400,000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வைபவ ரீதியாக வழங்கி வைத்துள்ளார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் தலைமையில், பிரதேச செயலக வளாகத்தில் குறித்த நிகழ்வு நேற்று  இடம்பெற்றிருந்தது.  

இவ்விளையாட்டு உபகரணங்கள் கவீந்திரன் கோடீஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டு, கதிரவன் விளையாட்டுக் கழக நிர்வாக உறுப்பினர்களிடம் அவரால் கையளிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, கதிரவன் விளையாட்டுக் கழகம், விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகங்களுக்கான கழக சீருடைகளையும் கவீந்திரன் கோடீஸ்வரன் வழங்கி வைத்திருந்தார்.

இந்நிகழ்வில், திருக்கோவில் பிரதேசபையின் தவிசாளர் இ.வி. கமலராஜன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் டி. மோகனகுமார், கணக்காளர் எம். அரசரெத்தினம், கவீந்திரன் கோடீஸ்வரனின் செயலாளர் டி. சுரேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .