2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

சேற்றில் சாதிக்கும் வீரர்கள் போட்டி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு வருடந்தோரும் நடைபெறும் சேற்றில் சாதிக்கும் வீரர்கள் போட்டி இவ்வருடமும் கிரகறி வாவிக்கு அருகாமையில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றது.

நுவரெலியா மாநகர சபை முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே ஆரம்பித்து வைத்த இப்போட்டியில் 14 வீரர்கள் போட்டியிட்டனர்.

இந்த போட்டிக்காகவென விசேடமாக தயார் செய்யப்பட்ட  ஜீப் ரக வாகனங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. குறைந்த நேரத்தில் போட்டியை நிறைவு செய்யும் வீரர்களே போட்டியின் வெற்றியாளர்களாக கருதப்படுவார்கள்.

இப்போட்டி விதி முறையானது, ஒரு வாகனத்தில் இரண்டு ஓட்டுனர்கள் இருப்பார்கள். இவர்களில் ஒருவர் உதவியாளராக கடமையாற்றுவார்.

திடீரென வாகனம் சேற்றில் இருகினாலோ அல்லது தண்ணீரில் விழுந்துவிட்டாலோ அதனை வெளிக் கொண்டுவருவதற்கு உதவியாளர் ஒத்துழைப்பு செய்வார்.

ஸ்டேன்டட் மொடிபை, ஸ்டேன்டட், பெண்கள் பிரிவு என  மூன்று பிரிவுகளின் கீழ் இப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஸ்டேன்டட் மொடிபை பிரிவில் முதலாம் இடத்தை இந்திக சஞ்சய அவருடைய உதவியாளர் நவீன் மாரப்பனவும் பெற்றுக் கொண்டனர்.

இரண்டாம் இடத்தை சிஹாரா திலின ஜயசேகர அவருடைய உதவியாளர் துசித சிரி குமார், மூன்றாம் இடத்தை பிரினித் மனம்பேரி அவருடைய உதவியாளர் சத்துரங்க மதுமாலும், ஸ்டேன்டட் பிரிவில் முதலாம் இடத்தை தமித் டீ சில்வா, இரண்டாம் இடத்தை துசித ஜயவீர மூன்றாம் இடத்தை தினேஸ் அப்பு ஆராச்சியும் பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை மாலி  சம்பிகா, இரண்டாம் இடத்தை மாலி திசாநதயக்கவும் பெற்றுக் கொண்டனர்.

முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டோருக்கு மாநகர சபை முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே பரிசில்களை வழங்கி வைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .