Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே எ ஹமீட்-
மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய ‘ரிசாட் பதியுதீன் வெற்றிக் கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி- 2020’இன் காலிறுதிப் போட்டி, மருதமுனை - மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நேற்று(30) நடைபெற்றது. இச்சுற்றுப் போட்டியில், கல்முனை லக்கி ஸ்டார் கழகத்தை எதிர்த்து, மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட ஜம்பவான் அணியான வை.எஸ்.எஸ்.சி ஏறாவூர் விளையாட்டுக் கழகம் எதிர்த்துக் களமாடியது.
இதில், லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம் 05 : 02 என்ற கோல் அடிப்படையில் அபார வெற்றி பெற்று உதைபந்தாட்ட ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
இப்போட்டியில், லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக மாஜித் 03 கோல்கள், இர்பான் 01 கோல், ஆசிர் 01 கோல் என்ற அடிப்படையில், லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டு, சுற்றுப் போட்டியின் அரையிறுதி போட்டிக்கு, கல்முனை லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் தெரிவாகியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .