Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை குற்றவாளியாகக் கண்ட இராணுவ நீதிமன்றம், அவருக்கு இழிவுபடுத்தி களங்கம் உண்டாக்கும் பதவி நீக்கும் தண்டனையை விதித்துள்ளது,
இவ்வாறான தண்டனையை ஆங்கிலத்தில் Cashiering என்று குறிப்பிடுவார்கள். இந்த தண்டனை இராணுவ உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும். இது பதவி நீக்கச் சடங்காக நடத்தப்படுவது வழக்கம். பொதுவாக இந்த களங்கம் உண்டாக்கும் சடங்கின் போது அவருடைய இராணுவ சின்னங்கள் பறிக்கப்படும்.
அதிகாரியின் சீருடையில் அணியும் தோள்ப்பட்டை அடையாளம் கிழிக்கப்படும்; அவருடைய உத்தியோகச் சின்னம் மற்றும் விருதுகள் பிடுங்கி எடுக்கப்படும்; வாள் முறிக்கப்படும்; தொப்பி தட்டி அகற்றப்படும். பதவி உய நிலைப் பதக்கங்கள் முறுக்கி எடுத்து நிலத்தில் மோதி அடிக்கப்படும்.
இந்த இராணுவ மரபு வழி தண்டனையானது சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிக்கு அவமானத்தையும் சமுதாயத்தில் மறக்க முடியாத பங்கத்தையும் ஏற்படுத்துவதாக அமையும்.
இவ்வாறு தண்டணை பெற்ற சர்வதேச இராணுவ அதிகாரிகள் சிலர் வருமாறு:
பிரெஞ்சு இராணுவ தளபதியான பிலிப்பி பேட்டே அல்லது மார்ஷல் பேட்டே. இவர், பிரான்ஸின் ஒரு மாநிலத்தின் தலைவராக இருந்தவர். முதலாவது உலக மகா யுத்தத்தின் போது இவருடைய இராணுவ அதிதிறமையான தலைமைத்துவத்துக்காக இவர் அந்த நாட்டின் யுத்த கதாநாயகனாக கருதப்பட்டவர். ஆயினும், இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது இவரால் புரியப்பட்டதாக கூறப்பட்ட நடவடிக்கையால் இவர் தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்டு, ஆயுள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
தோமஸ் கொக்றேன் பிரபு. இவர் பிரித்தானியாவின் கடற்படையில் அதியுயர் பதவியை வகித்தர். இவர் பங்குச் சந்தை விவகார மோசடியொன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
ஆயினும், மீண்டும் சேவையில் சேர்க்கப்பட்ட இவர், கடற்படை அதிகாரியொருவருக்கு மதிப்பு குறைவாக நடந்து கொண்ட குற்றச்சாட்டை அடுத்து இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
(எஸ்.எஸ்.எஸ்.)
22 minute ago
33 minute ago
xlntgson Sunday, 15 August 2010 09:27 PM
அதெல்லாம் சரி மறதியாக யாரேனும் அவரை இன்னமும் ஜெனரல் என்றோ அல்லது ஜே.வி.பி யினர் போன்று தொடர்ந்தும் ஜெனரால் என்று கௌரவமாக அழைத்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படுமா? தண்டனை என்ன?
Reply : 0 0
hilmee Wednesday, 16 November 2011 09:05 PM
அது இப்போது உள்ள பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்க வேண்டும் mr xlntgson.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago