2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

குருபூசை நிகழ்வு

Sudharshini   / 2016 ஜூலை 11 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் காரைநகர் கிழவன்காடு கலாமன்ற அறநெறிப் பாடசாலை நடத்திய  மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வு, கடந்த வெள்ளிக்கிழமை (08) மாலை 6 மணிக்கு கிழவன்காடு கலாமன்ற மனோன்மணி கலையரங்கத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கிழவன்காடு கலாமன்ற தலைவர் ச.இராசநாயகம் வரவேற்புரையினை வழங்கினர். கலை நிகழ்ச்சிகளாக கலாமன்ற ஆசிரியர்களும் மாணவர்களும் வழங்கிய புஸ்பாஞ்சலி, பேச்சு, திருவாசகத் தேனிசை, அரங்க ஆற்றுகை என்பன நடைபெற்றன.

தொடர்ந்து, 'புகழில் திகழும் அழகன்' என்ற தலைப்பில் சொற்பொழிவினை வவுனியா தமிழ்ச்சங்க அமைப்பாளர் தமிழருவி காரை த.சிவகுமாரன் ஆற்றினார்.

'பெரிய புராணத்தில் விஞ்சி நிற்பது ஆண்டவர் சோதனையா? அடியவர் சாதனையா?' என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றமும் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .