Sudharshini / 2016 மார்ச் 14 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எல்.லாபீர்
தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தினத்தின் மணிவிழா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவபீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கே.தேவராசா தலைமையில் யாழ்.நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றது.
இந்நிகழ்வில், நாகரத்தினமாலை என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. வாழ்த்துமடல்களும் கௌரவ விருதுகளும், பொன்முடியும் நாகரத்தினத்துக்கு சூட்டப்பட்டன. அத்துடன், 'கொடைக்கோ' என்ற பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொழிலதிபர், கல்விக்காருண்யன், பொன்மனச்செம்மல், சமூகதிலகம், சமூக ஜோதி ஆகிய பல பட்டங்களை அவர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
40 minute ago