2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

முல்லை மாவட்ட கலைஞர்களுக்கான போட்டி

Niroshini   / 2016 மே 24 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னிக்குறோஸ் கலாசார பேரவை நடத்தும் முல்லை மாவட்டகலைஞர்களுக்கான போட்டி நிகழ்வுகளான பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம் அரிச்சந்திரா மயான காண்டம் சமூகநாடகம் ஆகிய போட்டி நிகழ்வுகள் சனிக்கிழமை(21) மாலை 3.00 மணிக்கு மு.யோகபுரம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கலந்து சிறப்பித்தார்

இப்போட்டியில் பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம் போட்டிக்காக பரந்தாமன் நாடககலாமன்றம்-கற்சிலைமடு இயக்குனர் வே.விமலேந்திராவின் அணியும் இராசேந்திரம்குழுவினர்-முல்லைத்தீவு இயக்குனர் திரு பரமசிவத்தின் அணியும் பங்குபற்றும் அதேவேளை, அரிச்சந்திர மயான காண்டம் போட்டிக்காக இயலிசை நாடக கலாமன்றம்-முள்ளியவளை இயக்குனர் திருமதி புவனா இரத்தினசிங்கத்தின் அணியும் பரந்தாமன் நாடககலாமன்றம்-கற்சிலைமடு இயக்குனர் க.தயாபரன் பரமசிவத்தின் அணியும் தமிழ்தாய் நாடக கலாமன்றம்-துணுக்காய் இயக்குனர் திரு க.கோவிந்தராசாவின் அணியும் பங்குபற்றும்.

இதேவேளை, சமூக நாடகம் போட்டிக்காக கவிதாலயா நாடக மன்றம்-பெரியபுளியங்குளம் இயக்குனர்க.செல்வராசாவின் அணியும் தமிழ்தாய் நாடக கலாமன்றம்-துணுக்காய் இயக்குனர் ம.இராஜகுலசிங்கத்தின் அணியும் பரந்தாமன் நாடக கலாமன்றம்-கற்சிலைமடு இயக்குனர் சி.வேதவனத்தின் அணியும்பங்குபற்றுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .