2021 மார்ச் 06, சனிக்கிழமை

வட மாகாண இலக்கிய விழா...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று தினங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த வட மாகாண இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் வட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இலக்கியத்துறைசார் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் இலக்கிய ஆய்வரங்குகள், நூல்வெளியீட்டு விழாக்கள் மற்றும் இலக்கியத்துறையில் சிறந்த பங்களிப்பை நல்கிய  படைப்பாளிகளுக்கான ஆளுநர் விருதுகளும் இலக்கிய நூலுக்கான விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில், பாரம்பரிய சிறு கைத்தொழில் மற்றும் மரபுரிமைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களின் அரச அதிபர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .