2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கிருஸ்திகாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு, அளுத்மாவத்தையைச் சேர்ந்த பரமசிவம், விஜி தம்பதிகளின் ஏக புதல்வியும், நாட்டிய கலாமந்திர் நடனப் பள்ளியின் இயக்குநர் கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவியுமான செல்வி கிருஸ்திகா பரமசிவனின் பரதநாட்டிய அரங்கேற்றம், எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறும்.

இந்நிகழ்வில், 'அவிக்னா' நாட்டியக் குழுவின் இயக்குநர் ஜீ.நரேந்திரா, சென்னையைச் சேர்ந்த நாட்டியத் தாரகையும் கலைஞருமான திருமதி தீபா நரேந்திரா ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் விச்சர்லி சர்வதேசப் பாடசாலையின் அதிபர் கிங்ஸ்லி ஜயசிங்க கௌரவ அதிதியாகவும் கலந்துகொள்வர். நடன அரங்கேற்றம் காணும் செல்வி கிருஸ்திகா பரமசிவம், கொழும்பு விச்சர்லி சர்வதேசப் பாடசாலையின் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .