2021 மே 18, செவ்வாய்க்கிழமை

ரீ.எம்.கிருஷ்ணாவின் குரலிசைக் கச்சேரி...

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

இளம் தலைமுறையைச் சார்ந்த பிரபல இசைக்கலை வல்லுனரும் கர்நாடக இசை மேதையுமான ரீ.எம்.கிருஷ்ணாவின் கர்நாடகக் குரலிசை நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் கொழும்பு மற்றும் வடக்கின் சில பகுதிகளிலும் நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ள இந்த இசை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கொழும்பிலுள்ள இந்திய கலாசார நிலையம் மேற்கொண்டுள்ளது. அத்துடன், வடமாகாண கலாசார திணைக்களமும் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதரகமும் கூட்டாக இணைந்து மேற்படி இசைக்குழுவில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்குகின்றன.

இந்நிலையில், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை 2ஆம் திகதி மாலை 5 மணிக்கும், கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் 3ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கும், எதிர்வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்திலும் ரீ.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 5ஆம் திகதி மாலை 5 மணிக்கு கொழும்பிலுள்ள இந்திய கலாசார மண்டபத்தில் கர்நாடக இசையின் இயல்புகள் பற்றிய ஒரு சிறப்புரையினை ரீ.எம்.கிருஷ்ணா நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .