2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

சிறுவர் கலைவிழா

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு விமோச்சனா இல்லம் முதன்முறையாக ஏற்பாடு செய்த 'மது போத்தலை வெற்றி கொள்வோம்' எனும் தலைப்பிலான சிறுவர் கலைவிழா விமோச்சனா இல்லத்தின் கல்லடி வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த அமைப்பின் ஸ்தாபகர் ஜோர்டன் கோத், பணிப்பாளர் செல்விகா சகாதேவன் ஆகியோர் அதிதிகளாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது மது போதைக்கு எதிரான சிறுவர்களின் பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன.

மதுபோதையிலிருந்து மனிதர்களை மீட்கும் பணியை மேற்கொள்ளும் இந்த  அமைப்பு 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. குடிபோதையால் பாதிக்கப்பட்டவர்கள் 36 நாட்கள் தங்கியிருந்து இந்த இல்லத்தில் இலவசமாக சிகிச்சை பெற்று வழமை நிலைக்குத் திரும்புகின்றனர்.

மேலும், குடிபோதையில் பாதிக்கப்பட்ட 70 பேரை அதிலிருந்து இந்த அமைப்பு  மீட்டுள்ளது.

குடிபோதையால் பாதிக்கப்பட்டோருக்கு விழிப்புணர்வாகவே இச்சிறுவர் கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--