2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ஓவிய, புகைப்படக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகங்கள் இணைந்து நடத்தும் 2013ஆம் ஆண்டுக்கான  கலாசார விழாவை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட  ஓவிய மற்றும் புகைப்படக் கண்காட்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச சபைக் கட்டிடத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரும்  கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.டபிள்யூ.யூ.வெலிக்கலவும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சி.அன்சாரும் கலந்துகொண்டதுடன், பிரதேச ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்களும் கலந்து கொண்டனர். 

இந்தக் கண்காட்சியில் பிரதேசத்தைச் சேர்ந்த ஓவியர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களின் நூற்றுக்கணக்கான புகைப்படங்களும் ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--