2021 மார்ச் 04, வியாழக்கிழமை

சஞ்சிகை வெளியீடு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 23 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு ஓட்டமாவடி கோட்டக் கல்விப்பிரிவில் உள்ள செம்மன் ஓடைப் அல்ஹமறா வித்தியாலயத்தில்  சனிக்கிழமை மாலை 'த புக்மார்க்' என்ற ஆங்கில சஞ்சிகை வெளியிடப்பட்டது.

வித்தியாலய ஆங்கில ஆசிரியர் திருமதி ஆபிதா புஹாரியின் வழிகாட்டலில் மாணவர்களின் பல்வேறு துறைசார்ந்த ஆக்கங்களை உள்ளடக்கி இச்சஞ்சிகை வெளிவந்துள்ளது.

அதிபர் எம்.எஸ்.சுபைதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி கலந்து கொண்டதுடன், அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.அஹமட்லெப்பை, ஓட்டமாவடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.சுபைர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .