2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வேதக்கோயில் நாவல் வெளியீட்டு விழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    வி.தபேந்திரன், எஸ்.குகன்


இலங்கை மரபுரிமை தொல்பொருள் சின்னமான அல்வாய் வடக்கின் பழைய வேதக்கோயிலை மையமாக வைத்து கந்தமுருகஞானியினால் எழுதப்பட்ட வரலாற்று நாவலான பழைய வேதக் கோயில் நாவல் வெளியீட்டு விழா அல்வாய் சிறீலங்கா வித்தியாலய மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (12) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மூத்த எழுத்தாளர் தெணியான் நாவிலினை வெளியிட்டு வைக்க முதற்பிரதியை ஓய்வுபெற்ற அதிபர் திரு கி.கணேசன் பெற்றுக்கொண்டார்.

இந்நூல் வெளியீட்டுரையை எழுத்தாளர் அநாதரட்சகனும், சிறப்புரையை பண்டிதர் கலாநிதி திருநாவுக்கரசும், நூல் பற்றிய மதிப்பீட்டுரையை சு.குணேஸ்வரனும், நன்றியுரையை ந.நிர்மலனும் ஏற்புரையை நூலாசிரியர் கந்தமுருகஞானியும் நிகழ்த்தினார்கள்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .