2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

'நாடகத்தின் மூலம் நல்லதொரு சமூகத்தினை உருவாக்க முடியும்'

Kogilavani   / 2014 ஜூலை 04 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

நாடகத்தின் மூலம் நல்லதொரு சமூகத்தினை உருவாக்க முடியும் என்றும் நாடகத்தில் ஈடுபடுவதன் மூலம் கல்வியில் அக்கறையில்லாமல்; இருக்கும் மாணவர்களையும் நன்றாகப் படிக்க வைக்க முடியும் எனவும் யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி க.சிதம்பரநாதன் தெரிவித்தார்.

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் நாடக விழா கல்லூரி மண்டபத்தில் கல்லூரி அதிபர் எஸ்.சிவனேசன் தலைமையில் வியாழக்கிழமை (03) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிதம்பரநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'அரங்கு என்பது மனம்விட்டு பேசுகின்ற ஒரு இடமாக விளங்குகின்றது. ஒவ்வொரு பிள்ளைகளிடமும் திறமைகள் உண்டு. அத்திறமைகளினை இனங்கண்டு அதனை வெளிக்கொணர வேண்டும்.

அதற்கு நாடகம் துணையாக இருக்கும். நாடகங்கள் மூலம் மாணவர்கள் தமது மன உணர்வுகளினை வெளிப்படுத்திக் கொள்ளவும், தம்மை புதுப்பித்துகொள்ளவும் முடிகின்றது. மேலும் புத்தாக்க சிந்தனையுடன் செயற்படவும் தொடங்குகின்றனர்.

சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும் மக்களிடையே தன்னம்பிக்கையினைக் கொண்டு வருவதிற்கு நாடகம் துணை நிற்கின்றது. நாடகத்தில் ஈடுபடும்போது பாதுகாப்பு உணர்வினையும் அவர்கள் பெறுகின்றனர்.

விழா, சடங்கு, பண்பாடு என்பன மக்களுக்கான அறிவினை வழங்குகின்ற விடயமாகவுள்ளன. நாடக போட்டிகளில் பங்குபற்றுவதால் ஒருவர் மீது இன்னொருவருக்குள்ள போட்டி, பொறாமை போன்றன நீக்கப்படும்.

பாடசாலைகளில் ஆசிரிய, மாணவ உறவு என்பது வேறுபாடுடையதாக விளங்கும். ஆனால் நாடக போட்டிகளில் பங்குபற்றுகின்றபோது ஆசிரிய மாணவ உறவு வித்தியசமானதாக வேறுபாடுடையதாக விளங்கும். எல்லோரும் ஒன்றுகூடி ஒற்றுமையாக செயற்படுகின்ற களமாக இது விளங்கும்.

எமது சமூகத்தினை மீளக் கட்டியமைக்கவேண்டியது அவசியமாகும். நாங்கள் வீழ்ந்து கிடக்கின்ற இனம். அறியாமையில் சிக்கியுள்ளோhம். அவற்றில் இருந்து விடுபடுவதற்கு சமூக நிறுவனங்கள் துணை செய்ய வேண்டும்.

கலையும் ஒருவிளையாட்டுதான். அரங்கில விளையாடுவதன் மூலம் மன வெளிப்பாடு ஏற்படுகின்றது. சமூகத்தினை  உருவாக்குவதற்கு அரங்க செயற்பாட்டில் ஈடுபட்டு ஆளுமையுள்ள சமூகத்தினை உருவாக்குவோம்'  என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .