2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

இரு நூல்களின் வெளியீட்டு விழா

Sudharshini   / 2015 ஜனவரி 31 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் ,வா.கிருஸ்ணா


கலாபூசணம் மு.தம்பிப்பிள்ளை எழுதிய,  வெற்றித்திருமகள் மற்றும் மனம் போல வாழ்வு எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா களுவாஞ்சிகுடி, இராசமாணிக்கம் மண்டபத்தில் சனிக்கிழமை (31) நடைபெற்றது.


இந்நூல் வெளியீட்டு விழாவை தென்றல் சஞ்சிகையின் நிருவாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


இந்நூலுக்கான நயவுரையினை த.சேரலாதனும், ஏற்புரையினை எழுத்தாளர் கலாபூசணம் மு.தம்பிப்பிள்ளையும் நிகழ்த்தினர்.


பிரதேச செயலாளர் எஸ்.தனபாலசுந்தரம் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.தங்கேஸ்வரி, த.கனகசபை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலையின் வைத்திய அத்தியட்சகர்  ஜி.சுகுணன் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் புண்ணியமூர்த்தி, இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கல்வியியலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .